அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக் – துருவ்-க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஒப்பந்தம்

அர்ஜூன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் நாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார்.

இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. படம் ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில் படம் கைவிடப்பட்டுவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதில், இதே கதை புதிய இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் உடன் மீண்டும் தயாரிக்கப்பட்டு திரையிடப்படும் என்றும் , விரைவில் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினரும், கதாநாயகியும் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட இயக்குநர் பாலா, “படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்திலிருந்து விலகிக்கொள்வது என்பது நானாக எடுத்த முடிவு. துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை” என்று கூறினார்

இந்தநிலையில் அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்குக்கு புதிய கதாநாயகி தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் வெளியான பாலிவுட் படமான அக்டோபர் படத்தில் அறிமுகமாகிக் கவனம் பெற்ற பனிதா சந்து கதாநாயகியாக தேர்வாகியுள்ளார். பனிதா லண்டனில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*