பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு: முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றத் திட்டம்

parliament session


மாநிலங்களவையில் இன்று முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று, மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. அதன்பின் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். அப்போது ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி நிலவியது. அதனால் மசோதாக்கள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெருகிறது

இதில் ஏற்கனவே மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாததால், கடந்த கூட்டத்தொடரில் முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் முடங்கியது. இந்த சட்ட மசோதாவில் உள்ள 3 ஆண்டு சிறைத்தண்டனை போன்ற கடுமையான பிரிவுகளை நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணியின் கடைசி நாடாளுமன்றக் கூட்டம் இது என்பதால், முத்தலாக் தடுப்பு மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்து நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*